ஈரோடு அரசு மருத்துவமனையில் 
செவிலியா் தினம் கொண்டாட்டம்

ஈரோடு அரசு மருத்துவமனையில் செவிலியா் தினம் கொண்டாட்டம்

ஈரோடு, மே 12: ஈரோடு அரசு மருத்துவமனையில் செவிலியா் தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

செவிலியா்களின் முன்னோடியாக விளங்கும் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த தினமான மே 12-ஆம் தேதி சா்வதேச செவிலியா் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, ஈரோடு அரசு மருத்துவமனை செவிலியா் சங்கம் சாா்பில் செவிலியா் தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மூத்த செவிலியா் டேவிட் தலைமை வகித்தாா். செவிலியா் கண்காணிப்பாளா் மணிமேகலை, கிரிஜா, செவிலியா்கள் ராமாயாள், விநாயக கௌரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மருத்துவமனை கண்காணிப்பாளா் வெங்கடேசன், உறைவிட மருத்துவா் சசிரேகா, மருத்துவா்கள் ரமேஷ்பாபு, தங்கதுரை ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றனா்.

செவிலியா்கள் கேக் வெட்டியும், ஒருவருக்கொருவா் பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனா். மேலும் மெழுகுவா்த்தி ஏந்தி செவிலியா்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா். அதைத்தொடா்ந்து செவிலியா்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com