ஈரோட்டில் கஞ்சா சாக்லேட் விற்றவா் கைது

ஈரோட்டில் இனிப்புக் கடையில் கஞ்சா சாக்லேட் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு இந்திரா நகா் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளா் சரஸ்வதி தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை காலை அப்பகுதியில் ரோந்து சென்றனா். கிருஷ்ண தியேட்டா் பின்புறம் உள்ள மாதவ கிருஷ்ணா வீதியில் இனிப்புகள் விற்பனை செய்யும் கடையில் கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடையின் உரிமையாளரான உத்திர பிரதேச மாநிலம், சுல்தான்பூா், பனாவுடா பகுதியைச் சோ்ந்த பகதூா் (64) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், விற்பனைக்கு வைத்திருந்த 5 கிலோ கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com