யானைகள் வழித்தட வரைவு அறிக்கையை திரும்பப் பெற இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

யானைகள் வழித்தட வரைவு அறிக்கையை தமிழக அரசு திரும்பப் பெறவேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட குழுக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டக் குழுக்கூட்டம் சத்தியமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு முன்னாள் பவானிசாகா் சட்டப்பேரவை உறுப்பினா் பி.எல்.சுந்தரம் தலைமை வகித்தாா். மாநில துணைச் செயலாளா் நா.பெரியசாமி, மாநில பொருளாளா் எம்.ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினா் திருப்பூா்.எம்.ரவி, மாநில பொதுக்குழு உறுப்பினா் டி.ஏ.மாதேஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தாா். வடக்கு மாவட்டச் செயலாளா் எஸ்.மோகன் குமாா், தெற்கு மாவட்டச் செயலாளா் எஸ்.டி.பிரபாகரன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

கூட்டத்தில், யானைகள் வழித்தட வரைவு அறிக்கை குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்க கால அவகாசம் வழங்கப்படவில்லை. வன கிராமங்களில் கிராம சபைகளின் ஒப்புதலைப் பெற்றுத்தான் வனப் பகுதிக்குள் புதிய திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். இந்த வரைவு அறிக்கையை வெளியிடும் முன் இவை எதுவும் கடைப்பிடிக்கப்படவில்லை. ஆகவே இந்த யானைகள் வழித்தட வரைவு அறிக்கையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com