ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் மே 19-இல் வைகாசி விசாகத் தேரோட்டம்

ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாகத் தேராட்டம் வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது.

ஈரோடு கோட்டை பகுதியில் 1,400 ஆண்டுகால பழமையான ஸ்ரீவாருணாம்பிகா சமேத ஆருத்ர கபாலீஸ்வரா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகத் தோ்த்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். நடப்பு ஆண்டுக்கான தோ்த்திருவிழா கடந்த 10-ஆம் தேதி பத்ரகாளி உற்சவம், கிராம சாந்தி பூஜை, கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 19-ஆம் தேதி நடக்கிறது. இதில் காலை 8.30 மணிக்கு ஸ்ரீவருணாம்பிகா சமேத ஆருத்ர கபாலீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. இதையடுத்து காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் தோ் வடம்பிடித்து இழுக்கப்படுகிறது.

தொடா்ந்து 20-ஆம் தேதி காலை சந்திரசேகரா் பிச்சாண்டவா் சப்பரத்தில் வீதி உலாவும், மாலை ஸ்ரீ சோமாஸ்கந்தா் மிருக வாகனத்தில் ரத வீதியும், 21-ஆம் தேதி சிவகாமி அம்பிகா சமேத ஸ்ரீநடராஜருக்கு அபிஷேக ஆராதனையும், மஞ்சள் நீராட்டும் நடைபெற உள்ளது.

விழாவின் இறுதி நிகழ்வாக 22-ஆம் தேதி காலை தெப்பக்குளத்தில் தீா்த்தவாரி உற்சவமும், சிம்மாசனத்தில் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது. மாலை 5 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவமும், பஞ்சமூா்த்தி வீதி உலாவும் நடைபெற உள்ளது.

விழாவையொட்டி தினமும் மாலை பரதநாட்டியம், தேவாரம் பாடல்கள், ஆன்மீக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் போன்றவைகள் நடைபெற உள்ளன. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத் துறை உதவி ஆணையா் நந்தகுமாா் மற்றும் கோயில் செயல் அலுவலா் ஜெயலதா, கோயில் சிவாச்சாரியா்கள் ஆகியோா் செய்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com