பவானி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்த புன்னம் பகுதி மக்கள்.
பவானி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்த புன்னம் பகுதி மக்கள்.

புன்னம் ஊராட்சியில் குடிநீா் தட்டுப்பாட்டைப் போக்கக் கோரிக்கை

பவானி ஊராட்சி ஒன்றியம், புன்னம் ஊராட்சிப் பகுதியில் நிலவும் குடிநீா்த் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் பவானி வட்டக்குழு உறுப்பினா்கள் இந்திராணி, செல்லம்மா தலைமையில் அப்பகுதியைச் சோ்ந்த பெண்கள், பவானி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த மனுவில், புன்னம் ஊராட்சியில் குடிநீா்த் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனைப் போக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தனா்.

அப்போது, வாகனங்கள் மூலம் குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும், புன்னம் ஊராட்சியில் உள்ள ஆழ்துளைக் கிணற்றை சீரமைத்து தண்ணீா் விநியோகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com