பூதப்பாடியில் ரூ.12.17 லட்சத்துக்கு விளைபொருள்கள் விற்பனை

பவானியை அடுத்த பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.12.17 லட்சத்துக்கு வேளாண்மை விளைபொருள்கள் விற்பனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு விவசாயிகள் 3,899 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

இதில், சிறியவை ரூ.5.89 முதல் பெரியவை ரூ.12.69 வரையில் ரூ.34,687-க்கும், 67 மூட்டை கொப்பரை குவிண்டால் ரூ.8,029 முதல் ரூ.9,159 வரையில் ரூ.1,76,322-க்கும், 334 மூட்டை நிலக்கடலை குவிண்டால் ரூ.6,656 முதல் ரூ.7,525 வரையில் ரூ.8,46,244-க்கும், 20 மூட்டை எள் குவிண்டால் ரூ.11,869 முதல் ரூ.13,416 வரையில் ரூ.1,59,256-க்கும் ஏலம்போனது.

மொத்தம் 170.45 குவிண்டால் எடையுள்ள வேளாண் விளைபொருள்கள் ரூ.12,16,509-க்கு விற்பனையாயின.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com