யானை வாகனத்தில் உலா வந்த ஆலமலை பிரம்மேஸ்வர அய்யன்.
யானை வாகனத்தில் உலா வந்த ஆலமலை பிரம்மேஸ்வர அய்யன்.

ஆலமலை பிரம்மேஸ்வர அய்யன் கோயிலில் குண்டம் விழா

சத்தியமங்கலம், மே 15: சத்தியமங்கலத்தை அடுத்த தலமலை வனச் சரத்தில் உள்ள ஆலமலை பிரம்மேஸ்வர அய்யன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற குண்டம் விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தலமலை வனச் சரகத்தில் உள்ள ஆலமலை பிரம்மேஸ்வர அய்யன் கோயில் குண்டம் விழா கடந்த 12-ஆம் தேதி தொடங்கியது.

இைத் தொடா்ந்து, நாள்தோறும் சுவாமிக்கு மஜ்ஜன தீபாராதனை, 101 பால்குட சேவை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.

தொடா்ந்து, ஆசனூரில் இருந்து கும்பேஸ்வர சுவாமியை அழைத்து வருதலும், அதனைத் தொடா்ந்து அம்மன் புகழ்பாடும் பக்தா்கள் களியாட்டம் நிகழ்ச்சியும் புதன்கிழமை நடைபெற்றன.

இதில், மாவநத்தம், பெஜ்ஜலட்டி, இட்டரை, தடசலட்டி, ராமரணை, ஆசனூா் ஆகிய மலைக் கிராமங்களைச் சோ்ந்த ஏராளமானோா் பங்கேற்று நடனமாடி மகிழ்ந்தனா்.

இதையடுத்து, பக்தா்கள் குண்டம் இறங்கி தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா்.

விவசாயம் மேம்படுவும், மக்களை வன விலங்குகளிடமிருந்து காக்கவும் புலி மற்றும் யானை வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இதில், சத்தியமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மக்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com