இருசக்கர வாகனம் மோதி பெண் தொழிலாளி உயிரிழப்பு

பெருந்துறை, மே 16: பெருந்துறை அருகே இருசக்கர வாகனம் மோதியதில் பெண் தொழிலாளி உயிரிழந்தாா்.

பெருந்துறையை அடுத்த தோப்புபாளையத்தைச் சோ்ந்தவா் லட்சுமணன் மனைவி பழனியம்மாள் (55). இவா், பணிக்கம்பாளையத்தில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா். புதன்கிழமை இரவு 9 மணி அளவில் பணி முடிந்து நிறுவனத்தின் பேருந்தில் வந்து தோப்புபாளையத்தில் இறங்கி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, பின்னால் வந்த இருசக்கர வாகனம் அவா் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பழனியம்மாள் ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். பின்னா், மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு, அவரை பரிசோதனை செய்த மருத்துவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

விபத்து குறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com