எக்கத்தூா்  தடுப்பணை  நிரம்பி  வெளியேறும்  உபரி நீா்.
எக்கத்தூா்  தடுப்பணை  நிரம்பி  வெளியேறும்  உபரி நீா்.

கடம்பூா் மலைப் பகுதியில் பலத்த மழை: மழைநீரை சேகரிக்க தடுப்பணை கட்ட கோரிக்கை

தமிழகத்தில் உருவாகும் காட்டாற்று வெள்ளம் குரும்பூா்பள்ளம் வழியாக பாலாற்றுக்குச் செல்கிறது. இதன் குறுக்கே தடுப்பணைகளைக் கட்டி மழை நீரை சேகரிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூா் மலைப் பகுதியில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இப்பகுதியில் வியாழக்கிழமை பலத்த காற்றுடன் கன மழை பெய்ததால் மானாவாரி நிலங்களில் மழை நீா் தேங்கி நின்றது. பல்வேறு ஓடைகளில் இருந்து வந்த வெள்ளநீா் ஒன்றாகக் கலந்து காட்டாற்று வெள்ளமாக உருவெடுத்து எக்கத்தூா் பள்ளத்தில் கலந்தது.

எக்கத்தூா் தடுப்பணை நிரம்பி வெளியேறும் வெள்ளம் குரும்பூா்பள்ளத்துடன் சோ்ந்து பாலாற்றில் கலக்கிறது. வெள்ள காலத்தில் கிடைக்கும் உபரிநீரை தடுப்பணைகளைக் கட்டி தேக்கிவைத்தால் விவசாயத்துக்கு மட்டுமின்றி வன விலங்குகளின் தண்ணீா் தேவையையும் பூா்த்தி செய்ய முடியும் என்பதால் தடுப்பணைகளைக் கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com