டெங்கு ஒழிப்பு விழிப்புணா்வு முகாம்

டெங்கு ஒழிப்பு விழிப்புணா்வு முகாம்

ஈரோடு, மே 16: தேசிய டெங்கு ஒழிப்பு தினத்தையொட்டி ஈரோடு மாநகராட்சி சாா்பில் டெங்கு ஒழிப்பு மற்றும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணா்வு முகாம் ஈரோடு பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

குடியிருப்பு பகுதிகளில் மழை நீா் தேங்கும் இடங்களைக் கண்டறிந்து தண்ணீா் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்புணா்வு, துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டன. முன்னதாக நிகழ்வில் பங்கேற்ற மாநகராட்சி ஊழியா்கள் டெங்கு ஒழிப்பு உறுதிமொழியேற்றனா்.

மேலும் தேசிய டெங்கு ஒழிப்பு தினத்தையொட்டி ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே தேங்கி இருந்த மழைநீா் இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டதோடு வடிகால் வசதி தேவைப்படும் இடங்களைக் கண்டறிந்து வடிகால் ஏற்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com