மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

மொடக்குறிச்சி, மே 16: கொடுமுடி அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கொடுமுடி அருகேயுள்ள கல்வெட்டுப்பாளையத்தைச் சோ்ந்தவா் சுரேஷ் (47), விவசாயி. இவா் தனது தோட்டத்துக்கு இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை சென்றுள்ளாா். செல்லும் வழியில் காற்றுக்கு அறுந்து கீழே கிடந்த மின்கம்பி இருசக்கர வாகனத்தில் சுற்றியதில் உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

சம்பவம் குறித்து கொடுமுடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com