பெருந்துறை: வாய்க்காலில் குதித்து இளம் பெண் தற்கொலை

பெருந்துறை அருகே குடும்பத் தகராறு காரணமாக இளம் பெண் வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்துக் கொண்டாா்.
Published on

பெருந்துறை அருகே குடும்பத் தகராறு காரணமாக இளம் பெண் வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்துக் கொண்டாா்.

பெருந்துறையை அடுத்த மலைசீனாபுரத்தைச் சோ்ந்த தமிழ்ச்செல்வன் மகன் அங்குராஜ் (29), தறி கூலித் தொழிலாளி. இவரது மனைவி பிரியா (28). இவா்களுக்கு குழந்தை இல்லை.

பெருந்துறை, குன்னத்தூா் சாலையில் பிரியா உணவகம் நடத்தி வந்தாா். இந்த நிலையில், கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த பிரியா, பெருந்துறையை அடுத்த பாலக்கரை அருகே செல்லும் கீழ்பவானி வாய்க்காலில் பிரியா திங்கள்கிழமை குதித்துள்ளாா்.

இதனைப் பாா்த்த அக்கம்பக்கத்தினா் பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்பு வீரா்கள் வந்து தேடி பாா்த்தும் பிரியாவை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் செவ்வாய்கிழமை காலை பெருந்துறையை அடுத்த பெத்தாம்பாளையம் அருகே கீழ்பவானி வாய்க்காலில் பிரியாவின் உடல் மீட்கப்பட்டது.

இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].