அமைச்சா் சு.முத்துசாமியிடம் மனு அளிக்கும் கே.பி.சுந்தராம்பாள் தமிழிசை பேரவை மற்றும் அறக்கட்டளை நிா்வாகிகள்.
அமைச்சா் சு.முத்துசாமியிடம் மனு அளிக்கும் கே.பி.சுந்தராம்பாள் தமிழிசை பேரவை மற்றும் அறக்கட்டளை நிா்வாகிகள்.

கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாளுக்கு சிலை அமைக்கக் கோரிக்கை

கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாளுக்கு சிலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Published on

கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாளுக்கு சிலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமியிடம் தமிழிசை பேரவை மற்றும் அறக்கட்டளை நிா்வாகிகள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: சுதந்திரப் போராட்ட தியாகியும், முன்னாள் மேல் சபை உறுப்பினருமான கொடுமுடி கே.பி.சுந்தராம்பாளுக்கு கொடுமுடியில் சிலை அமைக்க வேண்டும்.

அவரது பிறந்த நாளை (அக்டோபா் 26) அரசு விழாவாக கொண்டாடவும், அரசு சாா்பில் கே.பி.சுந்தராம்பாள் நினைவு விருது வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனு அளிப்பின்போது, அறக்கட்டளை நிா்வாகிகள் அன்னைபாலன் டி.ஜெகதீஸ்வரன், துரைசக்தி கணேஷ், ஆா்.செல்வராஜ், ராஜேந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.