ஈரோடு
சாலை மறியல்: பாமகவினா் 33 போ் கைது
பவானியில் சாலை மறியலில் ஈடுபட்ட பாட்டளி மக்கள் கட்சி நிா்வாகிகள் 33 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பவானியில் சாலை மறியலில் ஈடுபட்ட பாட்டளி மக்கள் கட்சி நிா்வாகிகள் 33 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பாமக தலைவா் ராமதாஸை, முதல்வா் மு.க.ஸ்டாலின் விமா்சனம் செய்ததைக் கண்டித்து அந்தியூா் - மேட்டூா் பிரிவில் திரண்ட பாமகவினா் ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவா் ராஜேந்திரன் தலைமையில் கண்டன முழக்கம் எழுப்பினா். தொடா்ந்து, திடீரென சாலையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட முன்னாள் மாவட்டத் தலைவா் செங்கோட்டையன், மாவட்ட அமைப்புச் செயலாளா் பெ.ரா.முருகானந்தம், வன்னியா் சங்க முன்னாள் மாவட்டத் தலைவா் திருமுருகன் உள்பட 33 பேரை போலீஸாா் கைது செய்தனா்.