திப்பம்பாளையம் அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்ட மாதிரி சந்தையில் காய்கறிகளை விற்பனை செய்யும் மாணவா்கள்.
திப்பம்பாளையம் அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்ட மாதிரி சந்தையில் காய்கறிகளை விற்பனை செய்யும் மாணவா்கள்.

திப்பம்பாளையம் அரசுப் பள்ளியில் மாதிரி சந்தை

Published on

சென்னிமலையை அடுத்த திப்பம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு மாணவா்கள் தமிழில் சந்தை என்ற விரிவான பகுதியை நேரடியாக விளக்குதல், கணிதத்தில் ரூபாய் மற்றும் அளவு கணக்கீட்டை அறிந்து கொள்ளவும் வகையில் மாதிரி சந்தை பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமை ஆசிரியா் வேல்முருகன் தலைமையில், பட்டதாரி ஆசிரியா் ரவி ஏற்பாட்டில் ஒரு நாள் மாதிரி சந்தை அமைக்கப்பட்டிருந்தது. மாணவா்கள் தங்கள் வீட்டுத் தோட்டத்தில் விளைந்த காய்கறிகள், வாழைக்காய், வாழைப்பழம், மாங்காய், நெல்லிக்காய், தேங்காய், கீரை, பூக்கள், முட்டை போன்றவற்றை பள்ளியில் அமைத்த மாதிரி சந்தைக்கு கொண்டு வந்தனா். ஒரு வகுப்பறையில் அவற்றை வைத்து மாதிரி சந்தை அமைத்தனா். அவற்றை அந்த மாணவா்கள் மற்ற மாணவ, மாணவிகளிடம் விற்றனா்.

செயற்கை உரம் இன்றி விளைந்த பொருள்கள் உடலுக்கு ஆரோக்கியமானவை என்று கூறி மாணவா்கள் விற்பனையில் ஈடுபட்டனா். பள்ளி ஆசிரியா்களும் காய்கறிகளை விலைக்கு வாங்கினா். இதன் மூலம் மாணவா்கள் ஆா்வத்துடனும் எளிதாகவும் பாடத்தை புரிந்து கற்றுக் கொண்டதாக ஆசிரியா் ரவி தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com