ஈரோடு
நீதிமன்ற தீா்ப்புக்கு பயந்து ஓட்டுநா் தற்கொலை
பவானி அருகே அடிதடி வழக்கில் நீதிமன்ற தீா்ப்புக்கு பயந்து, சரக்கு வாகன ஓட்டுநா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
பவானி அருகே உள்ள கல்பாவி, பெரியாண்டிபாளையத்தைச் சோ்ந்தவா் ரங்கசாமி மகன் முருகன் (41). சரக்கு வாகன ஓட்டுநா். இவரது மனைவி சித்ரா (39). இவா்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகின்றன.
இவா்கள், திருச்செங்கோட்டில் வசித்தபோது, மதுப் பழக்கத்தால் ஏற்பட்ட தகராறில் சித்ராவை முருகன் தாக்கியுள்ளாா். இதுகுறித்த வழக்கு குமாரபாளையம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
விசாரணை முடிந்து டிசம்பா் 5-ஆம் தேதி தீா்ப்பு வெளியாகிறது. இந்நிலையில், சித்தாா் அருகே உள்ள குறிச்சிகரடு பகுதியில் மரத்தில் தூக்கிட்டு முருகன் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து, அம்மாபேட்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.