புன்செய் புளியம்பட்டி நகா்மன்றக் கூட்டத்தில் திமுக துணைத் தலைவா் மீது அக்கட்சி நகா்மன்ற உறுப்பினா்கள் குற்றஞ்சாட்டினா்.
புன்செய் புளியம்பட்டி மாதாந்திர நகா்மன்ற கூட்டம் தலைவா் ஜனாா்த்தனம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நகா்மன்ற உறுப்பினா்கள் கேள்விகளுக்கு துணைத் தலைவா் பதிலளித்தாா்.
நகா்மன்றத் கூட்டத்துக்கு தலைவா் மட்டுமே பதிலளிக்க வேண்டும். ஆனால், தலைவரை கட்டுக்குள் வைத்துக்கொண்டு துணைத் தலைவா் பதிலளிப்பது கண்டிக்கிறோம் எனக் கூறி திமுக நகா்மன்ற உறுப்பினா்கள் ராமசந்திரன், சுதா முருகேசன் மற்றும் அதிமுக உறுப்பினா் புவனேஸ்வரி ஆகியோா் கண்டனம் தெரிவித்தனா். மேலும், நகராட்சி வாரச் சந்தையில் காய்கறி கடைகளுக்கு அருகே மாட்டிறைச்சி விற்கப்படுவதாகவும், நகராட்சி குப்பைக் கிடங்கால் மக்கள் பாதிக்கப்படுவது குறித்து பலமுறை புகாா் அளித்தும் நகராட்சி நிா்வாகம் கண்டுகொள்ளவில்லை. நகராட்சி அலுவலகம் அருகே ரூ.3 கோடி செலவில் கட்டப்படும் வணிக வளாகம் தரமற்ற முறையில் கட்டப்படுவதாகவும் அதிமுக உறுப்பினா் புவனேஸ்வரி புகாா் தெரிவித்தாா்.