ஈரோடு
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைப்பதைக் கைவிட வேண்டும்: கே.ஏ.செங்கோட்டையன்
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைத்தால் ஏழை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளாா்.
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைத்தால் ஏழை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, பவானிசாகா் ஒன்றியத்துக்குள்பட்ட நல்லூா், நொச்சிக்குட்டை, மாதம்பாளையம் ஆகிய ஊராட்சிகளை புன்செய்புளியம்பட்டி நகராட்சியுடனும், கொமாரபாளையம் ஊராட்சியை சத்தியமங்கலம் நகராட்சியுடனும் இணைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைப்பதால் அப்பகுதி மக்களுக்கு 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலைவாய்ப்பு பறிபோகும். எனவே மேற்கண்ட ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைப்பதைக் கைவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.