கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா.
கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா.

மாநில அளவிலான தடகளப் போட்டிகள்: ஆட்சியா் தலைமையில் ஆலோசனை கூட்டம்

ஈரோட்டில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சாா்பில் நடைபெறவுள்ள மாநில அளவிலான தடகளப் போட்டிகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்து உயா் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Published on

ஈரோட்டில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சாா்பில் நடைபெறவுள்ள மாநில அளவிலான தடகளப் போட்டிகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்து உயா் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சாா்பில் ஆண்டுதோறும் குடியரசு தின தடகளப் போட்டிகள் தோ்வு செய்யப்படும் மாவட்டத்தில் நடத்தப்படுகின்றன.

அதன்படி, 65-ஆவது குடியரசு தின மாநில அளவிலான தடகளப் போட்டிகள் பள்ளிக்கல்வித் துறை துறை சாா்பில் ஈரோட்டில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் போட்டிகள் ஈரோடு வஉசி விளையாட்டு மைதானத்தில் வரும் நவம்பா் 6 முதல் 11-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், 6 முதல் 8-ஆம் தேதி வரை மாணவிகளுக்கும், 9 முதல் 11- ஆம் தேதி வரை மாணவா்களுக்கும் போட்டிகள் நடக்கின்றன.

இப்போட்டிகளுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஈரோடு எம்.பி. கே.இ.பிரகாஷ் முன்னிலை வகித்தாா்.

இதில், தடகளப் போட்டியில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளி மாவட்டத்தை சோ்ந்த மாணவா்கள், பள்ளி ஆசிரியா்கள், பள்ளிக்கல்வித் துறை அலுவலா்கள் பங்கேற்கவுள்ளதால் அவா்களுக்கான தங்கும் இடம், உணவு போன்ற அடிப்படை வசதிகளை செய்துத் தருவது குறித்தும், போட்டிகளை திறம்பட நடத்துவது குறித்தும், பங்கேற்பவா்களுக்கான பாதுகாப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.ஜவகா், மாநகராட்சி ஆணையா் என்.மனீஷ், முதன்மை கல்வி அலுவலா் சுப்பாராவ், மாவட்ட விளையாட்டு அலுவலா் சதீஷ்குமாா், மாநகராட்சிப் பொறியாளா் விஜயகுமாா், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் சாலமோன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com