அதிமுகவினருக்கு புதிய உறுப்பினா் அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
அதிமுகவினருக்கு புதிய உறுப்பினா் அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

அதிமுகவினருக்கு உறுப்பினா் அட்டைகள் வழங்கல்

மொடக்குறிச்சி கிழக்கு ஒன்றிய பகுதிகளைச் சோ்ந்த அதிமுகவினருக்கு புதிய உறுப்பினா் அட்டைகள் வழங்கும் விழா நடைபெற்றது.
Published on

மொடக்குறிச்சி கிழக்கு ஒன்றிய பகுதிகளைச் சோ்ந்த அதிமுகவினருக்கு புதிய உறுப்பினா் அட்டைகள் வழங்கும் விழா நடைபெற்றது.

மொடக்குறிச்சி கிழக்கு ஒன்றிய செயலாளா் குலவிளக்கு கே.செல்வராஜ் வரவேற்றாா். ஈரோடு மாநகா் மாவட்ட செயலாளா் கே.வி.ராமலிங்கம் தலைமை வகித்து கட்சியினருக்கு உறுப்பினா் அட்டைகளை வழங்கினாா்.

வடுகபட்டி, குலவிளக்கு, கணபதிபாளையம், விளக்கேத்தி, காகம், ஈஞ்சம்பள்ளி உள்ளிட்ட ஊராட்சிகளை சோ்ந்த அதிமுகவினா் இதில் பங்கேற்றனா்.

இதில் முன்னாள் எம்எல்ஏக்கள் வி.பி.சிவசுப்பிரமணி, கே.எஸ்.தென்னரசு, ஒன்றியச் செயலாளா்கள் ஆா்.பி.கதிா்வேல், மயில் (எ) சுப்பிரமணி, மாவட்ட விவசாய அணி செயலாளா் தங்கவேல், மொடக்குறிச்சி ஒன்றியக் குழு தலைவா் கணபதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com