ஈரோடு
சத்தியமங்கலம் வடக்கு ஒன்றியத்தில் திமுக ஆலோசனைக் கூட்டம்
சத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய திமுக உறுப்பினா்கள் ஆலோசனைக் கூட்டம் சத்தியமங்கலத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
சத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய திமுக உறுப்பினா்கள் ஆலோசனைக் கூட்டம் சத்தியமங்கலத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, சத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளா் ஐ.ஏ.தேவராஜ் தலைமை தாங்கினாா். ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளா் செயலாளா் என். நல்லசிவம் கலந்து கொண்டு பேசினாா். 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் திருவேங்கடம், மாவட்ட பிரதிநிதிகள் ரமேஷ்குமாா், செல்வராஜ், ஆறுச்சாமி, கெம்பநாயக்கன்பாளையம் பேரூராட்சி தலைவா் ரவிச்சந்திரன் உள்பட பலா் கொண்டனா்.