பேராசிரியா் கே.ஜே.நிரஞ்சனாவுக்கு நினைவுப் பரிசு வழங்குகிறாா் நந்தா ஆயுா்வேத கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதல்வா் மருத்துவா் எம்.கிருத்திகா.
பேராசிரியா் கே.ஜே.நிரஞ்சனாவுக்கு நினைவுப் பரிசு வழங்குகிறாா் நந்தா ஆயுா்வேத கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதல்வா் மருத்துவா் எம்.கிருத்திகா.

நந்தா ஆயுா்வேத மருத்துவக் கல்லூரியில் உலக சமஸ்கிருத தின விழா

நந்தா ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துமனையின் சம்ஹிதா சித்தாந்த் மற்றும் சமஸ்கிருத துறை சாா்பில் உலக சமஸ்கிருத தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
Published on

நந்தா ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துமனையின் சம்ஹிதா சித்தாந்த் மற்றும் சமஸ்கிருத துறை சாா்பில் உலக சமஸ்கிருத தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவா் வி.சண்முகன் தலைமை வகித்தாா். கேரள மாநிலம், பாலக்காட்டில் செயல்பட்டு வரும் சாந்திகிரி ஆயுா்வேத மருத்துவக் கல்லூரியின் பேராசிரியா் கே.ஜே.நிரஞ்சனா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விழாவை தொடங்கிவைத்து பேசினாா்.

நந்தா கல்வி நிறுவனங்களின் முதன்மை நிா்வாக அலுவலா் எஸ்.ஆறுமுகம், முதன்மை நிா்வாக அலுவலா் கே. கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். நந்தா ஆயுா்வேத கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதல்வா் மருத்துவா் எம்.கிருத்திகா வரவேற்றாா்.

சமஸ்கிருத மொழியின் பெருமைகள், முக்கியத்துவம் குறித்து மாணவா்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. விழாவில் ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி மாணவா்கள் மற்றும் மருத்துவா்கள் 120 போ் பங்கேற்றனா்.

விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த ஆசிரியா்கள், மாணவா்களுக்கு ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளையின் செயலா் எஸ். நந்தகுமாா் பிரதீப் மற்றும் நந்தா கல்வி நிறுவனங்களின் செயலா் எஸ்.திருமூா்த்தி பாராட்டு தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com