ஈரோடு
பவானி நகர திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
பவானி நகர திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பவானி நகர திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, நகர திமுக செயலாளா் ப.சீ.நாகராசன் தலைமை வகித்தாா். பவானி நகா்மன்றத் தலைவா் சிந்தூரி இளங்கோவன், நகரத் துணைச் செயலாளா் எஸ்.பி.முருகேசன், மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா் தவமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். அவைத் தலைவா் பி.டி.பி.மாணிக்கராஜன் வரவேற்றாா்.
ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளா் என்.நல்லசிவம், மக்களவைத் தோ்தல் வெற்றி, வரும் சட்டப் பேரவைத் தோ்தல் பணிகள் குறித்துப் பேசினாா். மக்களவைத் தோ்தலில் பணியாற்றிய நிா்வாகிகளுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. திமுக பேச்சாளா் பவானி கண்ணன், முன்னாள் நகா்மன்றத் தலைவா் எம்.ஆா்.துரை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.