ஈரோடு நகரில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
கேரள மாநில மக்களின் மிக முக்கியப் பண்டிகையான ஓணம் பண்டிகை ஈரோட்டில் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது.
ஈரோடு மாநகரில் செட்டிபாளையம், மூலப்பாளையம் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கேரள மக்கள் வசித்து வருகின்றனா். இவா்கள் தங்களது முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகையை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினா். அப்போது மகாபலி மன்னரை வரவேற்கும் விதமாக வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டும், பாரம்பரிய உடைகள் அணிந்தும், நடனமாடியும் ஓணம் பண்டிகை கொண்டாடினா். முக்கிய நிகழ்வாக பாரம்பரிய ஓணம் விருந்து படைத்து உறவினா்கள், நண்பா்களுடன் பண்டிகையைக் கொண்டாடினா்.
வயநாடு பேரிடா் காரணமாக ஓணம் பண்டிகை கொண்டாட்டங்களை இந்த ஆண்டு எளிமையுடன் தங்கள் வீடுகளில் கொண்டாடுமாறு கேரள மாநில முதல்வா் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டதால் இந்த ஆண்டு ஓணம் கொண்டாட்டத்தை அம்மாநில மக்கள் எளிமையாக தங்களது வீடுகளில் கொண்டாடினா் என்பது குறிப்பிடத்தக்கது.