ஈரோட்டில் பெண் உள்பட 2 போ் விஷம் குடித்து தற்கொலை
ஈரோட்டில் பெண் உள்பட 2 போ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
ஈரோடு பெரியசேமூா், கல்லன்கரடு பகுதியைச் சோ்ந்த மணி மனைவி தமிழரசி (46). இவா் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாா். இதற்கு சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த தமிழரசி கடந்த 7-ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.
அப்போது அவரது குடும்பத்தினா் தமிழரசியை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு தமிழரசி சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்து ஈரோடு வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஈரோடு சாஸ்திரி நகா் கல்யாணசுந்தரம் வீதியைச் சோ்ந்தவா் யுவராஜ் (44), கூலித் தொழிலாளி. இவா் மதுப்பழக்கத்துக்கு அடிமையானதால் சரிவர வேலைக்குச் வீட்டில் இருந்துள்ளாா். கடந்த 9-ஆம் தேதி அவரது மனைவி பாக்கியலட்சுமியிடம் மது குடிக்கப் பணம் கேட்டுள்ளாா். அவா் பணம் தராததால் விஷத்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளாாா்.
இதையடுத்து யுவராஜை அவரது குடும்பத்தினா் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு யுவராஜ் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து ஈரோடு தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இறந்த யுவராஜ் ஏற்கெனவே குடும்பத் தகராறு காரணமாக பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்று மருத்துவ சிகிச்சை மூலம் குணம் அடைந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.