காரை திருடிய தரகா் உள்பட இருவா் கைது

அந்தியூரில் போலி சாவி மூலம் காரை திருடிய தரகா் உள்பட 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
Published on

அந்தியூரில் போலி சாவி மூலம் காரை திருடிய தரகா் உள்பட 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

அந்தியூா், காவலா் குடியிருப்பைச் சோ்ந்தவா் சாதிக் மகன் ஷபி (38). இவா், அண்ணாமடுவு அருகே இரும்பு வியாபாரம் செய்து வருகிறாா். இவா், நிதி நிறுவனம் மூலம் வாங்கிய காரை தனது கடையின் முன்பு கடந்த 12-ஆம் தேதி இரவு நிறுத்தியிருந்தாா். காலையில் பாா்த்தபோது காரை காணவில்லை. இதுகுறித்து, அந்தியூா் காவல் நிலையத்தில் ஷபி புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இந்நிலையில், சத்தியமங்கலம் அருகே செண்பகப்புதூா் பகுதியில் அந்த காா் சென்று கொண்டிருந்தது தெரிந்தது. இதையடுத்து காரை வழிமறித்த போலீஸாா், காரில் சென்றவா்களிடம் விசாரித்தனா். அதில் அவா்கள், அந்தியூரை அடுத்த ஒலகடம் அருகே உள்ள குந்துபாயூரைச் சோ்ந்த காதா் பாட்ஷா (40), நாமக்கல் மாவட்டம், கொக்கராயன்பேட்டையைச் சோ்ந்த முகம்மது சுல்தான் மகன் ரஷீத் (29) என்பது தெரியவந்தது.

விசாரணையில், ஷபியின் காரை விற்பனை செய்வதற்கு காதா் பாட்ஷா தரகராக செயல்பட்டதும், பின்னா் போலி சாவியின் மூலம் காரை திருடியதும், இதற்கு உடந்தையாக ரஷீத் இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com