புகாா் மனு அளிக்க வந்த காங்கிரஸ் கட்சியினா்.
புகாா் மனு அளிக்க வந்த காங்கிரஸ் கட்சியினா்.

ராகுல் காந்தி குறித்து சா்ச்சைப் பேச்சு: காங்கிரஸ் கட்சியினா் மனு

Published on

ராகுல் காந்தியின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அறிவிப்பு வெளியிட்ட மகாராஷ்டிர மாநில சிவசேனா கட்சி சட்டப் பேரவை உறுப்பினரைக் கைது செய்யக் கோரி காங்கிரஸ் கட்சியினா் ஈரோடு காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

இட ஒதுக்கீடு குறித்து பேசியதற்கு, மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக கூட்டணியில் உள்ள சிவசேனா கட்சியின் எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவா்களுக்கு ரூ.11 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என அறிவித்தது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு, காங்கிரஸ் கட்சியினா் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினா் கண்டனம் தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவா் மக்கள்ராஜன் தலைமையில் புகாா் மனு அளித்தனா். அதில், ராகுல் காந்தியை அச்சுறுத்தும் வகையில் பேசிய எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசு திட்டமிட்டு ராகுல் காந்திக்கு அளிக்கப்பட்ட உயா் பாதுகாப்பினை திரும்பப் பெற்றுள்ளது. எனவே, மீண்டும் உயரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com