பூதப்பாடியில் ரூ.15 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

பவானியை அடுத்த பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.15 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.
Published on

பவானியை அடுத்த பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.15 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

இங்கு, 698 மூட்டைகள் பருத்தி விற்பனைக்கு வந்தது. கிலோ ரூ.76.99 முதல் ரூ.80.19 வரையில் ஏலம் போனது. மொத்தம் 211.29 குவிண்டால் பருத்தி ரூ.15,08,693-க்கு விற்பனையானது.

அந்தியூரில்...

அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 3 மூட்டைகள் நிலக்கடலைக்காய் (பச்சை) கிலோ ரூ.35.35 முதல் ரூ.39 வரையில் ரூ.7,700-க்கும், 170 மூட்டைகள் நிலக்கடலைக்காய் (காய்ந்தது) கிலோ ரூ.68.68 முதல் ரூ.75.16 வரையில் ரூ.4,46,450-க்கும் விற்பனையானது.

X
Dinamani
www.dinamani.com