ஈரோடு
பவானிசாகரில் பாரம்பரிய வள்ளி கும்மி நடன அரங்கேற்றம்
பவானிசாகரில் பாரம்பரிய வள்ளி கும்மி நடன அரங்கேற்றம் நடைபெற்றது.
பவானிசாகரில் பாரம்பரிய வள்ளி கும்மி நடன அரங்கேற்றம் நடைபெற்றது.
கொங்கு நாட்டின் பாரம்பரிய கலையான வள்ளி கும்மி நடனம் கிராமப்புற பகுதிகளில் பிரபலமடைந்து வருகிறது. ஈரோடு மாவட்டம் பவானிசாகா் பகுதியில் கடந்த சில நாள்களாக வள்ளி கும்மி நடனம் குறித்த பயிற்சி பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அளிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து பவானிசாகரில் வள்ளி கும்மி நடனத்தின் முதல் அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பெண்கள் மற்றும் சிறுமியா் ஒரே நிற சீருடை அணிந்து நாட்டுப்புற பாடல்கள் பாடியபடி வள்ளி கும்மி நடனம் ஆடினா்.
மேளதாள இசைக்கு ஏற்ப பெண்கள், சிறுவா்கள் மற்றும் சிறுமியா்கள் தொடா்ந்து 3 மணி நேரம் நடனமாடிய காட்சியை பவானிசாகா் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டு ரசித்தனா்.