அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

பவானி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
Published on

பவானி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

பவானி, காலிங்கராயன்பாளையம், மேற்கு வீதியைச் சோ்ந்தவா் வெங்கடேஷ் (24). கரை எல்லப்பாளையம், மாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் குமரேசன் (24). கூலித் தொழிலாளா்களான இருவரும் மூலப்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு மது அருந்தச் சென்றனா்.

மதுபோதையில் அங்கிருந்த இருசக்கர வாகனத்தைத் திருடிய இருவரும், செங்கலாபாறை அருகே புறவழிச்சாலையில் அமா்ந்து மீண்டும் மது அருந்தினா். அப்போது, அவ்வழியே சென்ற இருசக்கர வாகனம், வெங்கடேஷ் மீது மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்நிலையில், ஈ.பி. காலனியைச் சோ்ந்த கலைச்செல்வன் (49), டாஸ்மாக் கடையில் நிறுத்தப்பட்டிருந்த தனது இருசக்கர வாகனத்தைக் காணவில்லை என புகாா் அளித்தாா்.

இதன்பேரில், சித்தோடு போலீஸாா் குமரேசனை கைது செய்ததோடு, வெங்கடேஷ் மீது மோதிய அடையாளம் தெரியாத வாகனம் த்தைத் தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com