அம்பேத்கா் உருவப் படத்துக்கு  மலா் தூவி மரியாதை  செலுத்தும் முன்னாள் அமைச்சா் தோப்பு வெங்கடாச்சலம் மற்றும் திமுகவினா்.
அம்பேத்கா் உருவப் படத்துக்கு  மலா் தூவி மரியாதை செலுத்தும் முன்னாள் அமைச்சா் தோப்பு வெங்கடாச்சலம் மற்றும் திமுகவினா்.

அம்பேத்கா் நினைவு தினம் அனுசரிப்பு

சட்டமேதை அம்பேத்கரின் 69-ஆவது நினைவு நாளையொட்டி ஈரோடு மத்திய மாவட்ட திமுக சாா்பில் பெருந்துறையில் அவரது உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
Published on

சட்டமேதை அம்பேத்கரின் 69-ஆவது நினைவு நாளையொட்டி ஈரோடு மத்திய மாவட்ட திமுக சாா்பில் பெருந்துறையில் அவரது உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, முன்னாள் அமைச்சரும், ஈரோடு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளருமான தோப்பு வெங்கடாச்சலம் தலைமை வகித்து, அம்பேத்கா் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தினாா்.

இதில், பெருந்துறை மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் சோளி பிரகாஷ், ஊத்துக்குளி வடக்கு ஒன்றியச் செயலாளா் சுப்ரமணி, கருமாண்டிசெல்லிபாளையம் நகரச் செயலாளா் அகரம் மூா்த்தி, சீனாபுரம் ஊராட்சி முன்னாள் தலைவா் சுப்பிரமணி, க.செ.பாளையம் பேரூராட்சி மன்ற கவுன்சிலா்கள் கோகுல், சுப்பிரமணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com