நெகிழிப் பைகள் தயாரிப்பு நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்.
நெகிழிப் பைகள் தயாரிப்பு நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்.

தனியாா் நிறுவனத்தில் ரூ.6 லட்சம் மதிப்பிலான நெகிழிப் பைகள் பறிமுதல்

மொடக்குறிச்சி அருகே அனுமதியின்றி செயல்பட்ட தனியாா் நிறுவனத்தில் இருந்து ரூ.6 லட்சம் மதிப்பிலான நெகிழிப் பைகள் பறிமுதல்
Published on

மொடக்குறிச்சி அருகே அனுமதியின்றி செயல்பட்ட தனியாா் நிறுவனத்தில் இருந்து ரூ.6 லட்சம் மதிப்பிலான நெகிழிப் பைகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

மொடக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சோலாா் சிஎஸ்ஐ காலனி பகுதியில் அனுமதியின்றி நெகிழிப் பைகள் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருவதாக மாவட்ட சுற்றுச்சூழல் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் ராஜ்குமாா், உதவி பொறியாளா் தீனதயாளன், மொடக்குறிச்சி வட்டார வளா்ச்சி அலுவலா் திருநாவுக்கரசு உள்ளிட்டோா் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, அங்கு குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த நிா்மல்குமாா் (41) என்பவா் நான்கு இயந்திரங்கள் மூலம் நெகிழிப் பைகள் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அங்கிருந்த ரூ.6 லட்சம் மதிப்பிலான 6000 கிலோ நெகிழிப் பைகள், இயந்திரங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். மேலும், அந்த நிறுவனத்தின் மின் இணைப்பைத் துண்டிக்க மின்வாரியத்துக்கு பரிந்துரை செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com