ஈரோடு
தமிழகத்தில் மாற்றம் நிகழும்: ஹெச். ராஜா
தமிழகத்தில் மாற்றம் நிகழும் என பாஜக மூத்த தலைவா் ஹெச்.ராஜா கூறினாா்.
தமிழகத்தில் மாற்றம் நிகழும் என பாஜக மூத்த தலைவா் ஹெச்.ராஜா கூறினாா்.
இது தொடா்பாக அவா் ஈரோடு மாவட்டம், கோபியில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காா்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என மதுரை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. திமுக அரசு ஹிந்து விரோத அரசாக செயல்பட்டு வருகிறது.
முருகனுக்குச் சொந்தமான இடத்தில் தீபம் ஏற்றுவதை எப்படி தடுக்க முடியும்? வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் திருப்பரங்குன்றம் தீபம் பிரச்னைதான் முக்கியமானதாக இருக்கும்.
இதன் மூலம் திமுக அரசு அகற்றப்படும். அதிமுக- பாஜக கூட்டணிக்கு எடப்பாடி கே.பழனிசாமி தலைவராக உள்ளாா். தமிழகத்தில் நிச்சயம் மாற்றம் நிகழும் என்றாா்.
