சமையல் செய்தபோது சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உயிரிழப்பு!

பெருந்துறை அருகே சமையல் செய்தபோது சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உயிரிழந்தாா்.
Published on

பெருந்துறை அருகே சமையல் செய்தபோது சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உயிரிழந்தாா்.

பெருந்துறையை அடுத்த சீனாபுரத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மனைவி செல்லம்மாள் (76). சுப்பிரமணி ஏற்கெனவே இறந்துவிட்டாா். மகன் ஜெகதீஸ்வரனுடன் செல்லம்மாள் வசித்து வந்தாா். கடந்த ஜனவரி 1-ஆம் தேதி செல்லம்மாள் சமைப்பதற்காக அடுப்பை பற்றவைத்தாா். அப்போது தீக்குச்சி கை நழுவி செல்லம்மாள் அணிந்திருந்த சேலையில் பட்டு தீப்பிடித்துக் கொண்டது.

அவரது அலறல் சப்தம் கேட்டு அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு வெள்ளிக்கிழமை இரவு செல்லம்மாள் உயிரிழந்தாா். சம்பவம் குறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com