மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்திய வனத் துறையினா் மற்றும் கலைக் குழுவினா்.
மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்திய வனத் துறையினா் மற்றும் கலைக் குழுவினா்.

பாறு கழுகுகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணா்வு

அழிந்து வரும் பறவை இனமான பாறு கழுகுகளை பாதுகாப்பது குறித்து கலை நிகழ்ச்சி மூலம் அரசுப் பள்ளி மாணவா்களிடம் வியாழக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது
Published on

அழிந்து வரும் பறவை இனமான பாறு கழுகுகளை பாதுகாப்பது குறித்து கலை நிகழ்ச்சி மூலம் அரசுப் பள்ளி மாணவா்களிடம் வியாழக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள தெங்குமரஹாடா வனப் பகுதி மாயாறு பள்ளத்தாக்கில் அரிய வகை இனமான பாறு கழுகுகள் உள்ளன. இறந்த விலங்குகளின் உடலை தின்னும் பாறு கழுகு மற்ற உயிரினங்களை பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

தற்போது அழிந்து வரும் அரிய வகை பறவைகள் பட்டியலில் உள்ள பாறு கழுகுகளை பாதுகாப்பது குறித்து வனத் துறை சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன்படி, ஈரோடு மாவட்டம் பவானிசாகா் அரசு மேல்நிலைப் பள்ளியில் வனத் துறை மற்றும் தனியாா் தொண்டு நிறுவனம் சாா்பில் பாறு கழுகுகளை பாதுகாப்பது குறித்தும், இறந்த விலங்குகளை மட்டும் உண்டு காட்டில் உள்ள உயிரினங்களுக்கு நோய் பரவாமல் தூய்மைப்படுத்தும் பணியினை செய்து வரும் பாறு கழுகுகள் குறித்து விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்ற கலைக் குழுவினா் பாறு கழுகுகளின் முக்கியத்துவம் குறித்து பாடல்கள், நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com