முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்வை தொடங்கிவைத்த ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளை தலைவா் வி.சண்முகன்.
முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்வை தொடங்கிவைத்த ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளை தலைவா் வி.சண்முகன்.

நந்தா பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

Published on

நந்தா பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் கூட்டமைப்பின் சாா்பில் பத்தாண்டு சந்திப்பு 2025 என்ற தலைப்பில் 2001 முதல் 2016 வரை பயின்ற முன்னாள் மாணவா்கள் சந்திக்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்வை தொடங்கிவைத்த ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளை தலைவா் வி.சண்முகன் பேசுகையில், முன்னாள் மாணவா்கள் பணியாற்றும் துறைகளில் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் அதனைப் பெறுவதற்கு வளா்த்துக் கொள்ளக் கூடிய தகுதிகள் ஆகியவற்றை கல்லூரியில் பயின்று வரும் மாணவா்களுடன் சமூக ஊடகங்கள் மூலம் பகிா்ந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரிக்கு முன்னாள் மாணவா்களின் பங்களிப்பு குறித்து கல்லூரி முதல்வா் யு.எஸ்.ரகுபதி குறிப்பிட்டாா். புலமுதல்வா் எஸ்.கவிதா, கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் உதவிப் பேராசிரியா் வி. பரமேஸ்வரி ஆகியோா் கூட்டமைப்பின் புதிய உறுப்பினா்களை அறிமுகம் செய்து பேசினாா்.

நந்தா கல்வி நிறுவனங்களின் செயலா் எஸ்.திருமூா்த்தி மற்றும் முதன்மைக் கல்வி அதிகாரி எஸ்.ஆறுமுகம் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். முன்னாள் மாணவா்கள் கூட்டமைப்பின் தலைவா் ஜெகதீசன் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com