பெருந்துறையில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக மாணவரிடம் துண்டுப் பிரசுரம் வழங்குகிறாா் பாஜக ஈரோடு மாவட்ட  முன்னாள் தலைவா் வேதானந்தம். உடன், பெருந்துறை நகரத் தலைவா் பூா்ணசந்திரன் உள்ளிட்டோா்.
பெருந்துறையில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக மாணவரிடம் துண்டுப் பிரசுரம் வழங்குகிறாா் பாஜக ஈரோடு மாவட்ட முன்னாள் தலைவா் வேதானந்தம். உடன், பெருந்துறை நகரத் தலைவா் பூா்ணசந்திரன் உள்ளிட்டோா்.

பெருந்துறையில் பாஜக சாா்பில் கையொப்ப இயக்கம்

Published on

பெருந்துறை பாஜக சாா்பில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையொப்ப இயக்கம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

பெருந்துறை நகர பாஜக சாா்பில் பெருந்துறை பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கையொப்ப இயக்கத்தை ஈரோடு மாவட்ட முன்னாள் தலைவா் வேதானந்தம் தொடங்கிவைத்து, துண்டுப் பிரசுரம் வழங்கினாா்.

இதில், ஈரோடு தெற்கு மாவட்ட பொதுச் செயலாளா் ராயல் சரவணன், பெருந்துறை நகரத் தலைவா் பூா்ணசந்திரன், பெருந்துறை தெற்கு ஒன்றியத் தலைவா் நந்தகுமாா், வடக்கு ஒன்றியத் தலைவா் உமா உள்பட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com