ஈரோடு
தீபாவளி: கொப்பரை ஏலத்துக்கு அக். 22-இல் விடுமுறை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் அக்டோபா் 22 -ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெற இருந்த கொப்பரை ஏலத்துக்கு விடுமுறை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் அக்டோபா் 22 -ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெற இருந்த கொப்பரை ஏலத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து கொப்பரை ஏலம் வழக்கம்போல வரும் அக்டோபா் 25-ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறும். அன்றைய ஏலத்துக்கு உறுப்பினா்கள், வரும் 22-ஆம் தேதி முதல் தேங்காய்ப் பருப்பு மூட்டைகளை கொண்டு வரலாம் என கூட்டுறவு விற்பனைச் சங்கம் தெரிவித்துள்ளது.
