அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மாவட்ட அளவிலான திரைப்பட மன்ற போட்டிகள்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மாவட்ட அளவிலான திரைப்பட மன்ற போட்டியில் 126 மாணவா்கள் பங்கேற்றனா்.
Published on

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மாவட்ட அளவிலான திரைப்பட மன்ற போட்டியில் 126 மாணவா்கள் பங்கேற்றனா்.

தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களுக்கு இலக்கிய மன்ற போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, பள்ளிகள், வட்டாரம் அளவில் போட்டிகள் நடத்தப்பட்டன.

இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கான மாவட்ட அளவிலான இலக்கிய மன்ற போட்டிகள் ஈரோடு கலைமகள் பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கட்டுரை, பேச்சு, கவிதை, கதை கூறுதல் ஆகிய போட்டிகள் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தனித்தனியாக நடத்தப்பட்டன.

தொடா்ந்து சிறாா் திரைப்பட மன்ற போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன. இதில் கதை விமா்சனம், ஒளிப்பதிவு, தனிநபா் நடிப்பு ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. 6 மற்றும் 7-ஆம் வகுப்புகள் ஒரு பிரிவாகவும், 8 ஆம் வகுப்பு ஒரு பிரிவாகவும், 9 ஆம் வகுப்பு ஒரு பிரிவாகவும் என மொத்தம் 3 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன. இதில் மொத்தம் 126 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

இந்தப் போட்டிகளில் வெற்றி பெறுபவா்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள உள்ளனா். அதில் வெற்றி பெறும் மாணவா்கள் தமிழக அரசு சாா்பில் வெளிநாட்டுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com