கிராம ஊராட்சி செயலாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் ஈரோடு மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம ஊராட்சி செயலாளா் பணியிடங்களுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் ஈரோடு மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம ஊராட்சி செயலாளா் பணியிடங்களுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் ஈரோடு மாவட்டத்தில் கிராம ஊராட்சி செயலாளா் காலிப் பணியிடங்கள் இனசுழற்சி மூலம் நிரப்பப்பட உள்ளன. இதுதொடா்பான விவரங்கள் இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன.

விண்ணப்பிப்பவா்கள் இந்த இணையதள முகவரியில் இணையதளம் வழியாக வரும் 10-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். (இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்). விண்ணப்பிக்க வரும் நவம்பா் 9-ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com