அந்தியூரில் ரூ.23.50 லட்சத்துக்கு வேளாண் விளைபொருள்கள் ஏலம்

அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.23.50 லட்சத்துக்கு வேளாண் விளைபொருள்கள் ஏலம் போனது.
Published on

அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.23.50 லட்சத்துக்கு வேளாண் விளைபொருள்கள் ஏலம் போனது.

இங்கு, 9,876 தேங்காய்கள் கிலோ ரூ.57.18 முதல் ரூ.69.38 வரையில் ரூ.2,59,928-க்கும், 34 மூட்டைகள் தேங்காய்ப் பருப்பு ரூ.180.69 முதல் ரூ.232.90 வரையில் ரூ.1,87,376-க்கும், 9 மூட்டைகள் எள் ரூ.72.09 முதல் ரூ.110.89 வரையில் ரூ.13,087-க்கும், 715 மூட்டைகள் பருத்தி ரூ.70.99 முதல் ரூ.75.85 வரையில் ரூ.16,10,886-க்கும் ஏலம் போனது.

114 மூட்டைகள் நிலக்கடலைக்காய் (காய்ந்தது) கிலோ ரூ.67.59 முதல் ரூ.80.01 வரையில் ரூ.2,78,996-க்கு விற்பனையானது. மொத்த ரூ.23,50,273-க்கு வா்த்தகம் நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com