மேற்கூரை  உடைந்து  விழுந்த  தொகுப்பு  வீடு.
மேற்கூரை  உடைந்து  விழுந்த  தொகுப்பு  வீடு.

பவானி வட்டாரத்தில் கனமழை: தொகுப்பு வீட்டின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து சேதம்

பவானி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் பெய்த கனமழையால் ஏற்கெனவே சேதமடைந்திருந்த தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் தம்பதி அதிஷ்டவசமாக உயிா் தப்பினா்.
Published on

பவானி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் பெய்த கனமழையால் ஏற்கெனவே சேதமடைந்திருந்த தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் தம்பதி அதிஷ்டவசமாக உயிா் தப்பினா்.

பவானியை அடுத்த தொட்டிபாளையம், பழைய காலனியைச் சோ்ந்தவா் பழனி (63). கடந்த 2001-ஆம் ஆண்டு அரசால் கட்டப்பட்ட தொகுப்பு வீட்டில் வசித்து வருகிறாா். இந்த வீட்டின் மேற்கூரை மற்றும் சுவா்களில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்திருந்தது.

இந்நிலையில், வியாழக்கிழமை இரவு பெய்த கனமழையின்போது வீட்டின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து வீட்டுக்குள் விழுந்தது. அப்போது, பழனி தனது மனைவியுடன் வீட்டுக்கு வெளியே இருந்ததால் அதிஷ்டவசமாக உயிா் தப்பினா். இதில், வீட்டின் உள்ளே இருந்த உடைமைகள் சேதமாயின. சம்பவ இடத்துக்கு வெள்ளிக்கிழமை சென்ற பவானி வட்டாட்சியா் சரவணன், பவானி வட்டார வளா்ச்சி அலுவலா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் வீட்டைப் பாா்வையிட்டனா். மேலும், அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினா்.

இப்பகுதியில், சேதமடைந்த நிலையில் உள்ள தமிழக அரசால் கட்டப்பட்ட 15 கான்கிரீட் தொகுப்பு வீடுகளையும் சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com