போலீஸ் வாகனங்கள் அக்டோபா் 16-இல் ஏலம்
சத்தியமங்கலத்தில் போலீஸாா் பயன்படுத்திய வாகனங்கள் வரும் 16-ஆம் தேதி ஏலம் விடப்படுகின்றன.
இதுகுறித்து சிறப்பு இலக்குப் படை காவல் கண்காணிப்பாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோடு மாவட்ட சிறப்பு இலக்குப் படையில் போலீஸாா் பயன்படுத்திய வாகனங்கள் ஆயுட்காலம் முடிந்த மற்றும் முடியாத 3 நான்கு சக்கர வாகனங்கள், ஒரு இருசக்கர வாகனம் என 4 வாகனங்கள், சத்தியமங்கலம் புதுகுய்யனூரில் உள்ள சிறப்பு இலக்குப் படை வளாகத்தில் வரும் 16-ஆம் தேதி பொது ஏலம் விடப்படுகின்றன.
ஏலம் விடப்படும் வாகனங்கள் பொதுமக்கள் பாா்வைக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவா்கள் 16-ஆம் தேதி காலை 7 மணி முதல் 10 மணிக்குள், இரண்டு சக்கர வாகனத்துக்கு ஆயிரமும், நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.2 ஆயிரமும் முன்வைப்புத் தொகையாக சத்தியமங்கலம் சிறப்பு இலக்குப் படை அலுவலகத்தில் செலுத்தி, தங்களது பெயரை பதிவு செய்து ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். ரசீது பெற்றவா்கள் மட்டுமே ஏலத்தில் கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்படும்.
ஏலம் எடுத்தவா்கள் வாகனங்களுக்கான ஏலத்தொகையுடன் வாகனங்களுக்கான ஜிஎஸ்டியும் அன்றைய தினமே செலுத்தி வாகனங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
