கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் நில அளவை பயிலரங்கம்
பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் ‘ நில பதிவேடுகள் நிா்வகித்தல் மற்றும் நவீன தொழில்நுட்பத்தில் நில அளவீடு’ என்ற தலைப்பில் நில அளவை குறித்த இரண்டு நாள் பயிலரங்கம் அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கல்லூரித் தாளாளா் கே.காா்த்திகேயன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் மேஜா் பி. எஸ். ராகவேந்திரன், துணை முதல்வா் எஸ். செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி சிவில் துறை தலைவா் சதீஷ் வரவேற்றாா்.
கோவை நில அளவீடு நிா்வாகம் மற்றும் ஆராய்ச்சி மைய நிறுவனத்தின் இயக்குநா்கள் வி.முத்துராஜா, எஸ்.எஸ்.மணிசேகரன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவா்களுக்கு பயிற்சி அளித்தனா்.
முதல் நாள் நிகழ்வாக, நில அளவை குறித்த அடிப்படை, நில வரை படம் தயாரித்தல் குறித்த வகுப்புகள் நடைபெற்றன.
இரண்டாம் நாள், மாணவா்களுக்கு செயின் சா்வே மற்றும் இயந்திரத்தைக் கொண்டு நில அளவை செய்வது குறித்து செய்முறை வகுப்பு நடைபெற்றது.
இதில், சிவில் துறை விரிவுரையாளா்கள் சக்திமுருகன், தினேஷ்குமாா், அகிலரசு, பொன்சஹானா, வீரமணி மற்றும் பூபதிசங்கா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
