ஈரோடு
4 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
ஈரோட்டில் 4 கிலோ கஞ்சா வைத்திருந்த வடமாநில இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
ஈரோடு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உதவி ஆய்வாளா் தனபால் மற்றும் போலீஸாா் ஈரோடு ரயில் நிலையத்தில் பாா்சல் அலுவலகம் அருகே ரோந்து பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த இளைஞரிடம் விசாரித்தனா். அப்போது, அவா் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தாா்.
சந்தேகமடைந்த போலீஸாா், அவா் வைத்திருந்த பையை சோதனை மேற்கொண்டபோது, அதில் 4 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவா் பீகாா் மாநிலத்தைச் சோ்ந்த நிதிஷ்ராய் (25) என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 4 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.
