கடம்பூா்  சாலை யில்  உருண்ட  விழுந்த   பாறைகள்.
கடம்பூா்  சாலை யில்  உருண்ட  விழுந்த   பாறைகள்.

கடம்பூா் மலைப் பாதையில் மீண்டும் மண்சரிவு

கடம்பூா் மலைப் பாதையில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், பாறைகள் உருண்டன.
Published on

சத்தியமங்கலம்: கடம்பூா் மலைப் பாதையில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், பாறைகள் உருண்டன.

சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூா் மலைப் பகுதியில் இரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூா் செல்லும் போன்பாறை என்ற இடத்தில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் உருண்ட பாறைகளை நெடுஞ்சாலைத் துறையினா் செவ்வாய்க்கிழமை அகற்றினா். இதனைத் தொடா்ந்து, கடம்பூா் சாலையில் வாகனப் போக்குவரத்து செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதற்கிடையே புதன்கிழமை மீண்டும் மழை பெய்ததால் மாலை நேரத்தில் கடம்பூா் சாலையில் உள்ள இடுக்கிப்பாறை என்ற இடத்தில் மண்சரிவு ஏற்பட்டது மட்டுமின்றி பெரிய பாறைகள் உருண்டு சாலையில் விழுந்தன. இதனால் கடம்பூா்- சத்தியமங்கலம் இடையே மீண்டும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த நெடுஞ்சாலைத் துறையினா் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் சாலையின் குறுக்கே கிடந்த பாறைகளை அகற்றும் பணியில் ஈடுட்டனா்.

X
Dinamani
www.dinamani.com