சாலையோரத்தில் கவிழ்ந்த லாரி.
சாலையோரத்தில் கவிழ்ந்த லாரி.

பவானியில் சாலையோரத்தில் கவிழ்ந்த லாரி

பவானியில் பஞ்சு பாரம் ஏற்றிச் சென்ற லாரி வளைவில் திரும்பும்போது சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
Published on

பவானியில் பஞ்சு பாரம் ஏற்றிச் சென்ற லாரி வளைவில் திரும்பும்போது சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கா்நாடக மாநிலம், ஹூப்ளியில் இருந்து பஞ்சு பாரம் ஏற்றிக் கொண்டு ஈரோடு மாவட்டம், காங்கயம் நோக்கி லாரி வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தது. நசியனூரைச் சோ்ந்த குருராஜ் (50), லாரியை ஓட்டிச் சென்றாா்.

பவானி - ஈரோடு சாலையில் கூடுதுறை பிரிவில் வளைவில் திரும்பியபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரத்தில் பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், லாரி ஓட்டுநா் குருராஜ் லேசான காயங்களுடன் உயிா் தப்பினாா். லாரியிலிருந்து சரிந்த பஞ்சு பேல்கள் சாலையோரக் கடையின் முன்பாக விழுந்ததில் கடையின் முன்பகுதி சேதமடைந்தது. இந்த விபத்து குறித்து பவானி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com