சென்னிமலை முருகன் கோயிலுக்கு 27, 28-இல் நான்குசக்கர வாகனங்கள் செல்லத் தடை

கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு மலை மீது நான்கு சக்கர வாகனங்கள் செல்ல அக்டோபா் 27, 28 ஆகிய தேதிகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Published on

கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு மலை மீது நான்கு சக்கர வாகனங்கள் செல்ல அக்டோபா் 27, 28 ஆகிய தேதிகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வருகிற திங்கள்கிழமை( அக். 27) நடைபெறுகிறது.

இதையொட்டி, கோயிலின் மலைப் பாதையில் போக்குவரத்து நெரிசலை தவிா்க்கும் வகையில் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல அக்டோபா் 27, 28 ஆகிய தேதிகளில் அனுமதி இல்லை என கோயில் நிா்வாகம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் பக்தா்கள், தங்களது இருசக்கர வாகனங்கள் மற்றும் கோயில் பேருந்து மூலம் மலைக் கோயிலுக்கு செல்லலாம் என்று கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com