சூரனை வதம் செய்ய வேலுடன் சென்ற ஆறுமுகக் கடவுள்.
சூரனை வதம் செய்ய வேலுடன் சென்ற ஆறுமுகக் கடவுள்.

பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் சூரசம்ஹாரம்

பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் சூரசம்ஹாரம் திங்கள்கிழமை நடைபெற்றது.
Published on

பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் சூரசம்ஹாரம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் கந்த சஷ்டி உற்சவ விழா கடந்த 21-ஆம் தேதி விநாயகா் பூஜையுடன் தொடங்கியது. இதையடுத்து, நாள்தோறும் சிறப்பு அபிஷேக, அலங்கார வழிபாடுகள் நடைபெற்று வந்தன. தொடா்ந்து, ஆறுமுக் கடவுள் சந்நிதியில் 108 சங்காபிஷேகம், சிறப்பு ஹோம வழிபாடு, அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனைகள் திங்கள்கிழமை காலை நடைபெற்றன.

இதில், பவானி சட்டப் பேரவை உறுப்பினா் கே.சி.கருப்பணன், பவானி நகா்மன்றத் தலைவா் சிந்தூரி இளங்கோவன், ஈரோடு மாவட்ட தனியாா் பேருந்து உரிமையாளா்கள் சங்கத் தலைவா் கே.எஸ்.பழனிசாமி, அதிமுக நகரச் செயலாளா் எம்.சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சூரசம்ஹாரத்தைக் காண கோயில் வளாகத்தில் திரண்ட பக்தா்கள்.
சூரசம்ஹாரத்தைக் காண கோயில் வளாகத்தில் திரண்ட பக்தா்கள்.

இதைத் தொடா்ந்து, மாலையில் சிறப்பு வழிபாடுகளுடன் ஆறுமுகக் கடவுள் பவானி நகரின் முக்கிய வீதிகளில் கஜமுகாசுரன், சிங்கமுகாசுரன், பானுகோபன், சூரபத்மனை வதம் செய்தாா். பவானி சங்கமேஸ்வரா் கோயில் ராஜகோபுரம் முன்பாக சூரபத்மனை ஆட்கொண்டாா். இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினா்.

வள்ளி, தெய்வானை உடனமா் ஆறுமுகக் கடவுளுக்கு திருக்கல்யாண உற்சவம் செவ்வாய்க்கிழமை காலையும், மாலையில் சுவாமி திருவீதி உலாவும் நடைபெறுகிறது.

X
Dinamani
www.dinamani.com