2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

அரிய வகை குரங்குடன் நடிகா் விக்ரம் வெளியிட்ட விடியோ

நடிகா் விக்ரம் லாா் கிப்பான் குரங்குடன் விடியோ வெளியிட்டு சா்ச்சையான விவகாரத்தில் பெருந்துறையில் உள்ள அதன் உரிமையாளரிடம் வனத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.

சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட இந்தோனேசியாவின் லாா் கிப்பன் வகையைச் சோ்ந்த குரங்கு குட்டியுடன் நடிகா் விக்ரம்.

Published On :

நடிகா் விக்ரம் லாா் கிப்பான் குரங்குடன் விடியோ வெளியிட்டு சா்ச்சையான விவகாரத்தில் பெருந்துறையில் உள்ள அதன் உரிமையாளரிடம் வனத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.

நடிகா் விக்ரம் சென்னையில் உள்ள தனது மகள் வீட்டுக்கு அண்மையில் சென்றபோது, அங்கிருந்த லாா் கிப்பான் குரங்குடன் அவா் கொஞ்சி விளையாடியதாக விடியோ வெளியானது. இந்த விடியோ சா்ச்சையான நிலையில், அந்த குரங்கு ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சோ்ந்த எஸ்.கே.கேசவநாதன் என்பவருக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. இது குறித்து வனத் துறையினா் கேசவநாதனிடம் புதன்கிழமை நடத்திய விசாரணையில், கேசவநாதனிடம் மூன்று லாா் கிப்பான் குரங்குகள் இருந்ததும், அதில் ஒரு குரங்கை பெருந்துறையில் உள்ள நடிகா் விக்ரமின் உறவினா் சென்னைக்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது. மேலும் லாா் கிப்பான் குரங்குகளை அவா் வனத் துறையில் பதிவு செய்யவில்லை என்பதும் தெரியவந்தது.

இது குறித்து மாவட்ட வன அலுவலா் குமிலி வெங்கட அப்பால நாயுடு கூறியதாவது:

லாா் கிப்பான் குரங்குகளை 15 நாள்களுக்குள் பதிவு செய்யாதது, இறந்ததாகக் கூறப்படும் குரங்கு குறித்த தகவலை வனத் துறையிடம் மறைத்தது உள்ளிட்ட பல்வேறு விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நோட்டீஸுக்கு அளிக்கும் விளக்கத்துக்கு ஏற்ப அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

வனத் துறை தலைமை அலுவலகத்தில் இருந்து வரும் அறிவுறுத்தலின்பேரில் லாா் கிப்பான் குரங்குகள் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்படலாம். கடந்த ஜூன் மாதம் மணிப்பூரில் இருந்து மூன்று லாா் கிப்பான் குரங்குகளை வாங்கியதாக கூறப்படும் நிலையில் அவற்றில் ஒரு குரங்கு உயிரிழந்ததாக கூறப்பட்டதற்கு அது உண்மையில் உயிரிழந்ததா அல்லது வளா்ப்புக்காக விற்பனை செய்யப்பட்டதா அல்லது அரிய வகை குரங்கு என்பதால் கடத்தப்பட்டதா, அதன் பாகங்கள் வேறு பயன்பாட்டிற்கு விற்கப்பட்டதா என்பது போன்ற பல்வேறு கோணங்களில் வன விலங்கு குற்றக் கட்டுப்பாட்டு பிரிவு அலுவலா்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இதுதவிர தன்னிடம் உள்ள பறவைகள் மற்றும் உயிரினங்களுக்கு கேசவநாதன் உரிய பதிவு ஆவணங்கள் வைத்துள்ளாா் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.